மாணவர் விடுதியில் மர்மமான முறையில் பலியான மாணவன் ; பெரும் அதிர்ச்சியில் பொலிஸார்
கோவா மாநிலம் வாஸ்கோவில் பிரபல தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த குஷ்கரா (வயது 20) என்ற இளைஞர் 3ம் ஆண்டில் படித்து வந்தார்.
இந்நிலையில், குஷ்கரா நேற்று காலை விடுதி அறையில் மர்மான முறையில் உயிரிழந்தார்.
உயிரிழப்பிற்கான காரணம்?
நேற்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை குஷ்கரா திறக்காததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள், விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த விடுதி காப்பாளர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு படுக்கையில் குஷ்கரா சடலமாக கிடந்துள்ளார். அவரை மீட்ட மாணவர்கள், விடுதி காப்பாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் குஷ்கராவை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த பொலிஸார் , குஷ்கராவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஷ்கரா வெள்ளிக்கிழமை இரவு பேட்மிண்டன் விளையாடிவிட்டு இரவு உறங்கியுள்ளார். அவர் எப்படி உயிரிழந்தார்? உயிரிழப்பிற்கான காரணம்? குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.