மீண்டும் நாட்டிற்கு பாரிய மின்சார நெருக்கடி ; வெளியான எச்சரிக்கை
நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை நாடு பாரிய மின்சார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நிலக்கரி கையிருப்பு
அத்துடன் இந்த ஆண்டில் 212 நாட்களுக்கு மட்டுமே போதுமான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. அந்த 212வது நாள் ஜூலை 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக செப்டம்பர் நடுப்பகுதி வரை நிலக்கரியை இறக்க முடியாது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றரை மாதங்களுக்கு மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்று 03 மாதத்திற்கு மேல் வீட்டிற்கு வராத இளம் ஆசிரியர் ; விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்த நெருக்கடியால் நாடு முழுவதும் நீண்டநேர மின்தடை ஏற்படலாம் அல்லது ஒரு அலகு மின்சாரத்தின் விலை 90 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு, மின்கட்டணங்கள் பாரியளவில் உயர்த்தப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.