வேலை சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி ; வசமாக பிடிபட்ட இரு இளைஞர்கள்
ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, பதுலுஓயா சந்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் முச்சக்கர வண்டியுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கந்தகெட்டியப் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவர் கைது
கடத்தப்பட்ட ஆடைத்தொழிற்சாலை யுவதி, மஹியங்கனை, சொரபொர இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சந்தேகநபரின் வீட்டில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சொரபொர இடதுகரைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மஹியங்கனை, தம்பறாவப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஆவர் எனப் பொலிஸார் கூறினர்.