லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு பெரும் வரவேற்பு! மக்கள் ஆரவாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.

பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்றடைந்தார்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.
முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.