தமிழர் பகுதியொன்றில் இளம் பெண் கைதால் அதிர்ச்சி
ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சனிக்கிழமை (16) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், காரைதீவு 06 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், பெண் சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.