வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர் ; துயரில் கதறும் குடும்பம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய வரலாற்றுப் பாட ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனால், அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆசிரியரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஆசிரியரின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.