அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி அரேபியா ; வெளியான முக்கிய அறிவிப்பு
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று ரத்து செய்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும், இந்த முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கைத் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பு சிவராசாவின் சட்டப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்பத்தைக் குறிக்கிறது; இருப்பினும், அவரது தற்போதைய சட்ட நிலைமை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.