யாழ் போதனாவில் தொடரும் இளம் தாய்மார் உயிரிழப்புக்கள்; கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்கு செல்லும் இளம் தாய்மார்கள் தொடர்ச்சியாக மரணமடையும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்றையதினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த அவலநிலை?
அதேவேளை கடந்த சில நாட்களின் முன்னரும் சத்திர சிகிச்சையில் இளம் தாய் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த சோகம் முடியுமுன்னர் மற்றுமொரு இளம் தாய் மரணமாகியுள்ளார்.
அதுமட்டுமல்லாது மற்றுமொரு இளம் தாய் ஒருவர் இரட்டை குழைந்தைகளை பிரசிவித்த நிலையில் குழந்தைகள் உயிரிழந்திருந்தன.
அதனை தொடர்ந்து குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்த்து.
இந்நிலையில் யாழ் போதனாவில் தொடர்ந்து உயிரிழக்கும் இளம் தாய்மார்களின் உயிரிழப்புக்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் தொடர் உயிரிழப்புக்களுக்கு வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேசமயம் அண்மையில் கொழும்பில் வைத்தியசாலையில் 4 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் தாய் ஒருவர் பிரசவித்த சம்பவம் உள்ளது.
இப்படியான நிலையில் யாழில் மட்டும் ஏன் இந்த அவலநிலை தொடர்கின்றது? இனிவரும் காலங்களில் கர்ப்பிணிகளை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அக்கறை செலுத்தி மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் எனவும் சமூகவலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
யாழ் போதனாவில் அடுத்தடுத்து மரணங்கள்; மருந்துவர்களின் அசமந்தமா? நடப்பது என்ன?
யாழில் இரட்டை குழந்தைகளை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்