யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய முன்தினம் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நால்வர் கைது
சம்பவம் தொடர்பில் 19,27,30 மற்றும் 32 வயதுகளையுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வர்த்தக நிலையமானது நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இந்நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்ததுடன், திருடப்பட்ட பொருட்களையும் மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.