எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன்! சமூகவலைத்தளங்களில் வைரல்
மட்டு நகரில் எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன் தொடர்பிலான தகவலொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றன.
இந்த நிலையில் எரிபொருளுக்காக இரவு பகலாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறாறன நிலையில் மட்டு நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் வரிசைக்காக காத்தருந்த இளைஞர் ஒருவர் தான் நின்ற இடத்தை வாடகைக்கு வழங்கவுள்ளதாக கதிரை ஒன்றில் விளம்பரத்தை காட்சி படுத்தியுள்ளார்.
அத்துடன் தேவையானவர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் இந்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.