யாழில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய இளைஞன்!
யாழ்ப்பாண மாவட்டம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது உடமையில் 56 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 1.56 கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவுகள் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைதான நபர் விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் வைத்து சிறு பொதிகளை உருவாக்கிய பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
வயதானவர் 24 வயதுடைய புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.