அநுர ஆட்சியில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினுடைய பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலைகள் மற்றும் பிற பொருட்களின் விலை குறைப்பு மக்களுக்கு ஓரளவு நிம்மதி அளித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தரவுகளின் அடிப்படையில், ஒகஸ்ட் 31, 2024 மற்றும் ஆகஸ்ட் 31, 2025 க்கு இடையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டது.
அதே நேரத்தில் லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 39 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் மண்ணெண்ணெய் 17 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.