யாழில் பேஸ்புக் காதலில் விழுந்த யுவதியிடம் இளைஞன் செய்த செயல்

Sri Lanka Police Facebook Jaffna
By Sundaresan Jun 20, 2022 12:41 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த நூதன திருட்டு இடம்பெற்றது.

ஆனைக்கோட்டையை சேர்ந்த யுவதியின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல், சுமார் ரூ.4,000 பணம் திருடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பேஸ்புக்கில் அறிமுகமான நபரின் காதல் வலையில் சிக்கியே யுவதி இவற்றை இழந்துள்ளார்.

யாழ் நகரிலுள்ள அழகுக்கலை நிலையமொன்றில் பணிபுரியும் யுவதிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னர் பேஸ்புக்கில் இளைஞன் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, நெருக்கமாக உரையாடியுள்ளனர்.

இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பண்ணை கடற்கரையில் சந்தித்துள்ளனர். யுவதி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பெற்றோல் தட்டுப்பாட்டினால் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார். இதன்போது, இளைஞனின் பேஸ்புக் புகைப்படத்திற்கும், நேரடி தோற்றத்திற்கும் வேறுபாடு காணப்பட்டுள்ளது.

அது குறித்து யுவதி வினவிய போதும், இளைஞன் சாதுரியமாக நிலைமையை சமாளித்துள்ளார். பண்ணை கடற்கரையை ஒட்டிய சீமெந்து இருக்கையில் இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது இளைஞனிற்கு சில தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.

தன்னை ஏற்றி வந்த நண்பரின் நண்பரின் மோட்டார் சைக்கிள் சில்லு பஞ்சராகி விட்டதாகவும், அவரிடம் பணமில்லை, நகரத்தில் நிற்கும் அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு 10 நிமிடங்களிற்குள் வருவதாக கூறிய இளைஞன், பேஸ்புக் காதலியின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சென்றார்.

நகரில் பணிபுரிவதால் இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை யுவதி தவிர்த்துள்ளார். குறிப்பிட்டதை போலவே 10 நிமிடங்களில் இளைஞன் திரும்பி வந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, யுவதி இருந்த இடத்திற்கு வந்து, நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அந்த இளைஞன் புறப்படும் நேரத்தில் நண்பரை தொலைபேசியில் அழைத்துள்ளார். நண்பர் வந்ததும், மோட்டார் சைக்கிளில் ஏறி இளைஞன் சென்றுவிட்டார்.

யுவதி தரிப்பிடத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, மிகச்சிறிதளவு மீதம் விட்டு, ஏனைய பெற்றோல் உறிஞ்சி எடுக்கப்பட்டிருந்ததை அவதானித்தார்.

அத்துடன், மோட்டார் சைக்கிளிற்குள் வைக்கப்பட்டிருந்த பணப்பையிலிருந்த ரூ.4,000 பணமும் திருடப்பட்டிருந்தது. பண்ணை பகுதியில் நின்றிருந்த ஆனைக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவரும், நண்பர்களும் தலையிட்டு யுவதி வீடு திரும்ப சிறிதளவு பெற்றோல் வழங்கியதுடன், ஏனையவர்கள் ஏமாறாமல் இருக்க, சம்பவம் பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியுமாறு ஆலோசனை கூறினார்.

எனினும், யுவதி முறைப்பாடு பதிவு செய்யவில்லை. அநீதி நேர்ந்த பின்னரும், சமூகத்திற்கு அஞ்சி, மௌனமாக இருக்கும் ஒரு பகுதி பெண்களின் மனநிலை தொடரும் வரை, விதம் விதமான ரூபங்களில் ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்.

மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US