முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதி ஒன்றில் நீரில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (01-09-2023) காலை நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் இன்றையதினம் அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
ஆலயத்திற்கு முன்னாள் உள்ள நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.