22 வயது இளைஞரின் வாழ்வை பறித்த சிறைச்சாலை கிணறு
காலி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கிணற்றில் நீராடிக்கொண்டிருந்த கைதி ஒருவர், கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதி பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை
உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார்.
முன்னதாக, இவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 15ஆம் திகதி காலை சிறைச்சாலைக்குள் இருக்கும் கிணற்றில் இவர் நீராடிக்கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிறைச்சாலை மருத்துவமனை ஊடாக காலி கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.