மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
குருநாகல் இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கோகரெல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்று இரவு முதல் காணவில்லை என்று இன்று காலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விலங்கு பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்த அந்த இளைஞன் நேற்று இரவு தனது பணியை முடித்து வீடு திரும்புகிறேன் என்று குடும்பத்தினருக்கு அறிவித்த போதிலும், இரவு 10.00 மணிக்குப் பிறகும் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கோகரெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.