மது போத்தல்களுடன் சிக்கிய இளைஞன் ; சோதனையின் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்கள் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நீர்கொழும்பு - கொச்சிக்கடை, பலகத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 5 , 375 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 8, 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 8 , பியர் போத்தல்கள் 31 மற்றும் 17 வெளிநாட்டு சிகரட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.