கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேர்ந்த கொடூர சம்பவம்!
கிளிநொச்சி பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, தர்மபுரம் - பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் மெய்வள்ளுனர் திறனாய்வு போட்டியை இடம்பெற்றுள்ளது.
இதனை பார்வையிட்டு திரும்பி சென்ற பொழுது, வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு 30 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுதே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.