தமிழர் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்! வெளியான அதிர்ச்சி காரணம்
திருகோணமலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்ய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
இச்சம்பவம் நேற்றையதினம் (03-04-2024) அதிகாலை ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு, கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.