பிரித்தானியாவில் திடீரென மாயமான இளம் பெண் வைத்தியரின் மோசமான செயல்!
பிரித்தானியாவில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் இளம் பெண் வைத்தியர் ஒருவர் திடீரென காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஆணையம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள, fairfield வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்தியராக பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர் Raisah Sawati என்ற இளம் பெண் வைத்தியர் ஒரு நாள் தீடீரென காணாமல் போயுள்ளார்.
இதேவேளை, சில நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்பட, சில நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்காக வைத்தியரின் கையெழுத்துக்காக காத்திருக்க, வைத்தியரைக் காணாததால், ஒலிப்பெருக்கி மூலம் நான்கு முறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் குறித்த பெண் வைத்தியர் வராமல் போகவே, தாதியர் ஒருவர் அவரைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது Raisah பெண்கள் உடை மாற்றும் அறையில், மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒரு இருக்கையில் படுத்து நன்றாக தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, Raisah இப்படி தூங்குவது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவர் ஒருவருக்கு ஆடிட் வேலைக்கு உதவச் செல்வதாக கூறிவிட்டு இருட்டறை ஒன்றில் படுத்து உறங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், குழந்தை ஒன்றிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தான்தான் அதைக் காப்பாற்றியதாக பொய் கூறியது, சுவாசக்கோளாறால் உயிரிழந்த நோயாளி ஒருவரை காப்பாற்றத் தவறியது, மற்றும் தனது கல்வித்தகுதி குறித்து பொய் கூறியது என பல குற்றங்களை அவர் செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தியர்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Raisah, தன் மீதான நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.