இலங்கை மக்களின் மனதை வென்ற ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று!
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24) ஆகும். சாதாரண நபர் முதல் முதலாக இலங்கையின் பலம்மிக்க 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்.
அதுமட்டுமல்லாது ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி, இன , மத வேறுபாடின்றி இலங்கையை வளமான நாட்ஃபாக மாற்றுவதில் பல்வேறு வேலை திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதி அனுர
இலங்கை மக்கள் , தமிழர்கள், சிங்களவர்கள் , முஸ்லீம்கள் என வேறுபாடின்றி அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்றும், அனைவரும் என்றுமே சம்மானவர்கள் என்றும், ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை இருட்டில் தள்ளிய நிலையில், ஜனாதிபதி அனுர குமார, வளமான நாடு எனும் பாதையில் இலங்கையை கொண்டு செல்கின்றார்.

போதை ஒழிப்புகள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லதையே எண்ணுகின்ற ஓர் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இலங்கை மக்கள் , ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.