வாங்கிய சம்பளத்தை விட கூடுதலான சம்பளத்தை பெற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
வாங்க கூடிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கூடுதலான சம்பளத்தை பெற வேண்டும் என்றால் நாம் கூடுதலான உழைப்பை போட வேண்டும்.
சிலர் செய்யக்கூடிய வேலையை விட சற்று நல்ல வேலையாக உயர்ந்த சம்பளத்தில் வேலையை தேடுவார்கள்.
இந்த விஷயத்தில் எல்லாம் அதாவது செய்யக்கூடிய இந்த முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு வெற்றியை தர வேண்டும் என்றால் தற்போது வாங்க கூடிய சம்பளப் பணத்தில் முதல் செலவாக என்ன செய்யலாம்.
தானம் கொடுத்தல்
நீங்கள் வாங்கக்கூடிய முதல் சம்பளத்தில் ஒரு சுத்தமான பசு நெய் வாங்கி குழந்தைகள் அனாதை ஆசிரமத்திற்கு தானமாக கொடுக்கலாம்.
இதை செய்தால் வருமானம் இரட்டிப்பாவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நெய் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள். நெய் வாங்க எவ்வளவு செலவு செய்கிறீர்களோ அவ்வளவு பணம் திரும்பவும் உங்கள் கைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல குலதெய்வ கோவிலுக்கு வஸ்திர தானம் வழங்க வேண்டும்.குலதெய்வம் அம்மனாக இருந்தால் தரமான ஒரு நல்ல புடவையை வாங்கி தாம்புல தட்டில் வைத்து, மாலை, வெற்றிலை, பாக்கு, பழம், பூ வலையல் போன்றவற்றை அம்மனுக்கு கொடுத்து அலங்காரம் செய்து அபிஷேகம் செய்து வைக்க வேண்டும்.
ஆண் குலதெய்வம்
உங்களுடைய குலதெய்வம் ஆண் குலதெய்வம் ஆக இருந்தால் அந்த குலதெய்வத்திற்கு தரமான வேட்டி, அங்க வஸ்திரம், பூ பழம் மாலை இவைகளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
சம்பளம் வாங்கியவுடன் சம்பளப் பணத்திலிருந்தும் ஒரு மாதம் முதல் செலவை இப்படி செய்து பாருங்கள். நிச்சயமாக அடுத்தடுத்து வரக்கூடிய மாத சம்பளத்தில் நல்ல வித்தியாசத்தை காணலாம்.
முடியாதவர்களுக்கு கொடுக்க வேண்டிய தானம்
இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு அடுத்து வரக்கூடிய, மாத சம்பளம் உங்களுக்கு உயர்ந்தது என்றால், உயர்ந்த சம்பளத்திலிருந்து ஒரு தொகையை முடியாதவர்களுக்கு தானமாக கொடுத்து வாருங்கள்.
அதாவது கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யலாம். இதை ஒரு மாதம் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சம்பள தொங்கையில் இருந்து ஒரு தொகையை இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்து உதவலாம்.
இப்படி செய்வதால் உங்கள் வருமானம் உயர்ந்து கொண்டே செல்லும். மனதார மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயத்தை பின்பற்றி வந்தால் உங்களுடைய வருமானத்தில் வரும் மாற்றத்தை உணரலாம்.