காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்; கிடைக்கும் நன்மைகள்!
மனித வாழ்க்கைக்கு மட்டுமில்லை, அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.
தண்ணீரால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. எனவேதான் தினம் தினம் சரியான அளவில் நீரை பருக வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது.
உடலில் நீரின் அளவு குறைந்தால், பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். "நீரின்றி அமையாது உலகு" என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் நம்ம திருவள்ளுவர் கூட கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் நாம் தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை பருகலாமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது.
வெறும் வயிற்றில் நீர் குடித்தால் என்ன நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும்
கழிவுகள் வெளியேறும்
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
சருமம் இளமையாகும்
புத்துணர்வு கிடைக்கும்
செரிமானம் சீராகும் .
மலச்சிக்கலைச் சரிசெய்யும்
