மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பு மாமனார்
மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பாடசாலையில் பாலியல் கல்வி
குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தல் இடம்பெற்றது.
இத்ன் போது , சிறுமி சோகமாக இருந்ததனை அவதானித்து , அது தொடர்பில் ஆசிரியர் வினாவிய போதே சிறுமி தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கூறியுள்ளார்.
அது தொடர்பில் ஆசிரியரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , மாமனாரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, எதிரியான சிறுமியின் மாமனாரை குற்றவாளியாக கண்டு , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டினை செலுத்த தவறின் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் , அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என தண்டனை தீர்ப்பை வழங்கினார்.