முல்லைத்தீவில் நேற்று ஏமாற்றம் இன்றும் தொடரும் அகழ்வுப்பணி!
முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடி இன்று மீண்டும் அகழ்வுப் பணி தொடரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் எதுவும் மீட்கப்படாத நிலையில் இன்று (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்,பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணி இடம்பெற்றுவருகின்றது.