முகப்பருக்களால் கவலையா! தடுக்க மிக மிக எளிய வழி
தற்போதைய கலகட்டத்தில் ஆண்கள் , மற்றும் பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக முகப்பரு அமைந்துள்ளது. அதுவும் இள வயதினருக்கு மகப்பரு வந்து விட்டதே என்ற பெரும் கவலை ஏற்பட்டு விடும்.
முகப்பருக்கள் ஏன் ஏற்படுகின்றன?
பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப்பழக்கவழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது. முகப்பருக்கள் வந்துவிட்டால் சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் அது பரவக் கூடும் என்பதனால் பலருக்கும் அது தொடர்பில் கவலை ஏற்பட்டுவிடும்.
தடுப்பதற்கான வழிமுறைகள்:
முகப்பருக்களை சரிசெய்ய மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும் முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் மஞ்சள் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
வெந்நீரில் மஞ்சள் போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் முகப்பருக்களை சரிசெய்ய முடியும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதால் முகப்பருக்களை சரிசெய்ய சிறந்த தீர்வாகும்.
ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைத் தடவி வருவதன் மூலம் பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும். அத்துடன் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.