கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை
அநுராதபுரம் மஹவ, கொன்வேவ பகுதியில் உள்ள குடும்ப நல சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டின் முன் இன்று (2) ஒரு மாத பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மஹன காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஹவ, கொன்வேவ பகுதியில் வசிக்கும் குடும்ப நல சுகாதார ஊழியர் இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் திறந்தவெளியில் ஒரு நாற்காலியில் இந்த பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பிரதேச மக்கள் மஹவ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் குறித்த குழந்தையை நிகவெரட்டிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குறித்த குழந்தையில் பெற்றோர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.