உலகளவில் இந்த ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட செய்திகள்! முதல் இடம் எது தெரியுமா?
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலை வெளியிட்டு வருவது வழக்கம்.
இணையத்தில் தகவல்களை தேடுவோருக்கு சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த வசதியை பல மென்பொருள் நிறுவனங்கள் வழங்கினாலும், ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இவ்வாறான நிலையில், 2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளிள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் இடத்தில் இஸ்ரேல்-காசா இடையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பான செய்திகள் உள்ளது.
2-ம் இடத்தில் டைட்டானிக் நீர்முழ்கிக்கப்பல் தொடர்பான செய்திகள் உள்ளது.
3-ம் இடத்தில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தொடர்பான செய்திகளும் உள்ளன.
மேலும், இந்த பட்டியலில் நிலவை ஆராய்வதற்காக இந்தியா வெற்றிகரமாக அனுப்பிய சந்திரயான் -3 விண்கலம் தொடர்பான செய்திகள் 9-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.