கொரோனா உயிரிழப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணிப்போர் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாராந்திர ஆய்வு குறித்து நேற்று (14) அளித்த பேட்டியில் உலக சுகாதார நிறுவனத்தின் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியாசிஸ், (Dr Tedros Adhanom Ghebreyesus) இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், கடந்த வாரத்தில் மாத்திரம் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் இது கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட குறைவானது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐரோப்பியவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்றால் மரணிப்போர் எண்ணிகை குறைந்து வருதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் பல நாடுகள் தற்போதும் புதிய கொரோனா அலைகளை, மரணங்களை எதிர்கொண்டு வருதாக தெரிவித்துள்ளார்.