சிறைக்குள் அமோகமாக நடைபெற்ற போதைப்பொருள் வியாபாரம் ; சிக்கிய பொலிஸ் அதிகாரி
அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மிரிஹான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து 8 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 2 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.