யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம்

Sri Lankan Tamils Jaffna chemmani mass graves jaffna
By Sulokshi Apr 27, 2026 03:00 PM GMT
Report

  யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

 அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமானதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம் | Work Begins Jaffna Chemmani Mass Grave

மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மாத கால அகழ்வுப் பணிகளுக்காக கடந்த ஆண்டு கோரப்பட்ட 19 மில்லியன் ரூபா நிதி நீதி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அப்பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகளை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் போனதுடன், 2025ஆம் ஆண்டு முடிவடைந்ததனால் அந்த நிதியை இந்த ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்; பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி சாதனை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்; பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி சாதனை!

அதற்கமைய மேலும் ஐம்பத்தாறு நாட்கள் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை கடந்த பெப்ரவரி 09ஆம் திகதி யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இவ்வாறு அகழ்வுப் பணிகளுக்காக மாத்திரம் புதிதாகக் கோரப்பட்டுள்ள நிதி சுமார் 21 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம் | Work Begins Jaffna Chemmani Mass Grave

. நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.

45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் உள்ளடங்குகின்றன.

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம் | Work Begins Jaffna Chemmani Mass Grave

மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமாரின் அனுமதி கிடைத்துள்ளதாக, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கு மேலதிகமாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா தூதரக அதிகாரிகளும் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட அனுமதி கோரியிருந்தன.

28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியானது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US