அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் அரசமர விநாயகர்; குடிசையில் இருப்பவர்கள் கூட குபேரர் ஆகலாம்!
பலர் வாழ்க்கையில் பல வகையான சங்கடங்களை அனுபவித்து வருகின்றனர். அவ்வாறான விடயங்களை சில பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
வாழ்க்கையில் தலைநிமிர்ந்து கம்பீரமாக அரச வாழ்க்கையை வாழ அரச மரக்குச்சி பரிகாரத்தை செய்து பாருங்ககள்.
அரச மர குச்சி வழிபாடு
வீட்டின் அருகில் அரச மர விநாயகர் சிலை இருந்தால் அவரது பாதங்களை முதலில் வழிபட வேண்டும்.
அத்தோடு தினமும் உங்களுடைய பிரச்னைகளை அவரிடம் சொல்லி அவரை வலம் வந்து வழிபட்டால் எப்படிபட்ட பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் தீர்ந்து அரச வாழ்க்கை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
பரிகாரம்
அரசு மரத்தடி விநாயகருக்கு தோப்பு கரணத்தை போட்டு விளக்கேற்றி சிவப்பு நிற செம்பருத்தியை வைத்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று ஒரு ஐதீகம் உண்டு.
ஆனல் அரச மரத்திலுத்து குச்சிகளை எப்போதும் உடைத்து எடுக்க கூடாது என்று கூறப்படுகிறது.
வீட்டில் யாகம் செய்தல்
அரசு மரத்திலிருந்து குச்சிகள் காய்ந்து கீழே விழும் போது அதை சிறுக சிறுக சேகரித்து வீட்டில் சிறிய அளவு யாகம் நடத்தினால் பெரிய அளவில் யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதற்கு வசதி அற்றோர் ஒரே ஒரு குச்சியை எடுத்து மஞ்சள் தண்ணீரில் கழுவி காய வைத்து பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்து விட வேண்டும்.
பின்பு தினமும் விளக்கு ஏற்றும் போது அந்த குச்சியையம் சேர்த்து வழிபட்டாலும் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.