நாமலின் திருமண கொண்டாட்டம்; மனுவை விசாரிக்க அனுமதி
2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தொடர்பான மனுவை விசாரிக்க நீதிம்ன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாமலின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) 2 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
உண்மைகளை மதிப்பாய்வு செய்த பிறகு, அரசியலமைப்பின் பிரிவு 12(1) இன் கீழ் மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்து, குறித்த விசாரணையை அடுத்த வருடம் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.