முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வீடு வழங்க முன் வந்த தமிழர்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க தமிழர் ஒருவர் உட்பட , நான்கு பேர் முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.
வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர்
அதேவேளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷ கொழும்புக்குத் திரும்புவது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்க்ஷ, தங்காலையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் சிறிது காலம் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தேவைப்படும்போது கொழும்புக்குத் திரும்புவார் என்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
நேற்று (10) நாடாளும்ன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.