பதுளையில் துயரச் சம்பவம்: பெண் தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்!
பதுளை மாவட்டம் - பசறை, கோணக்கலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பாம்பு தீண்டி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கோணக்கலை பகுதியை சேர்ந்த 56 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த பெண் தொழிலாளி கடந்த 16ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவில் உள்ள தோட்டப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியிருந்தார்.
இதன்பின்னர் அவருக்கு பசறை வைத்தியசாலையில் முதலுதவிகள் அளிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் (19-08-2023) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.