வீடொன்றில் அலுமாரியில் ஆயுதங்கள்; பொலிசார் அதிர்ச்சி
ஒரு வீட்டில் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவால்வர், ஒரு கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் இரண்டு கத்திகளை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை, கஹத்தேவலவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவர் வெளிநாட்டில்
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டில் உள்ள அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொதியில் இந்தப் பொருட்கள் இருந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு ரிவால்வர், 28 வெடிமருந்துகள் மற்றும் ரிவால்வருக்குப் பயன்படுத்தப்படும் 5 வெற்று குண்டுகள், 20 மிமீ பிஸ்டல், ஒரு மகசின் மற்றும் 2 உயிருள்ள வெடிமருந்துகள், ஒரு பிஸ்டல் கேஸ் மற்றும் 2 கத்திகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டார், பெண்னிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாக அவர் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மேலதிக விசாரணைகளையும் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.