இலங்கையில் பிடியாணை; ஜனாதிபதி அனுரவுடன் விமானத்தில் பறந்த நாமல் ராஜபக்ஷ
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மாலத்தீவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார், அதே நேரத்தில் ராஜபக்ஷ ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அங்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.
நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு
அவர்கள் கொழும்பிலிருந்து மாலைத்தீவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 101 இன் வணிக வகுப்பில் இருந்தனர்.
அதேவேளை இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் இன்றைய தினம் பிற்பகல் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் காலை வெளிநாடு சென்றுள்ளதால் நாளை (29) தனது பிடியாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.