வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமித்த பெண்ணுக்கு இறுதியில் காத்திருந்த ஷாக்
தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமகிபுர, ஊவா குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசியத் தகவல்
குறித்த பெண்ணின் வீட்டில் எரிபொருள் சேகரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊவா குடாஓய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் குறித்த பெண் இந்த எரிபொருட்களைச் சேகரித்து மறைத்து வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் இன்று (29) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்து குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.