சிவனடிபாதமலைக்கு சென்ற பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு!
சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண்ணொருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (28-12-2024) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கம் 53 கல்கமுக பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான ஆர்.ஜி. ரேணுகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 11:30 மணியளவில் சிவனடிபாதமலைக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வேளையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்திருப்பதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு மரணித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெறவுது.
பரிசோதனைகள் முடிந்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.