புலம்பெயர் அமைப்புகளைத் திருப்திப்படுத்தவா சுரேஷ் சலே கைது!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், புலம்பெயர் அமைப்புகளைத் திருப்திப்படுத்தவா அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதி என அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 6 ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது சர்வதேச FBI அமைப்போ சலேயின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பை முறியடிக்க பங்காற்றிய ஒரு அதிகாரியை, புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் சிறையில் வாட்டி வதைப்பதாகவும் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.