காவுவண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்: இடைவழியில் நேர்ந்த சோகம்
பெண் ஒருவர் உடல் சுகவீனம் காரணமாக நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இடைவெளியில் மரணித்த சம்பவம் ஒன்று இன்றையதினம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் கடந்த இரண்டு தினங்கள் மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் இன்று நோயாளர் காவு வண்டி மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததால் அவரது உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அவரது சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இவ் மரணத்துக்கான காரணம் கொரோனா வைரஸ் தொற்றா அல்லது வேறு காரணங்களா என கண்டறியப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த பெண் மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த நாற்பத்தி ஏழு வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.