நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் திடீரென நுழைந்த பெளத்த பிக்கு!
யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள். உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடப்படத்தக்கது.