சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் ; டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.இந்த ராஜயோகமானது மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும்.
இந்த ராஜயோகம் புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இப்போது 2026 தொடக்கத்தில் சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்களின் இலக்குகளை அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சுக்கிரனின் அருளால் பல வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். செல்வாக்கு அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனநிலை சிறப்பாக இருக்கும். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.
