காதலனை கவர அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; மனைவி, பச்சிளம் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி
தவறான உறவுக்கு தடையாக இருந்த ரகசிய காதலனின் மனைவி மற்றும் அவரின் 6 மாத குழந்தை மீது இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் தெலங்கானா மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கேதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பருக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

முறை தவறிய உறவு
குறித்த நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமும் நடந்துள்ளது.
இது, நாகேஷின் மனைவிக்கு தாமதமாக தெரியவந்துள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது காதலியை சந்திப்பதை நாகேஷ் நிறுத்தியுள்ளார்.
அதை பொறுத்துக்கொள்ள முடியாத குறித்த பெண் நாகேஷின் வீட்டிற்குச் சென்று குறித்த நபரின் மனைவி மற்றம் கைக்குழந்தை மீது பின்னால் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
அதை சற்றும் எதிர்பாராத மனைவி தனது குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தூக்கி வீசியுள்ளார். தீப்பற்றி படுகாயமடைந்த பெண், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயத்துடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கைக்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. நாகேஷின் தூண்டுதலின்பேரில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக பெண் வீட்டார் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நாகேஷ் மற்றும் அவரது காதலி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில், சுஜாதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.