அடையாளம் காணப்பட்டது பயணப் பையிலிருந்து பெண்ணின் சடலம்
குப்பைகளைக் கொட்டும் இடமொன்றில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து நேற்றைய தினம் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
கை, கால்கள் கட்டப்பட்டு....பயணப் பையிலிருந்த பெண்ணின் சடலம்; தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார்!