நுகேகொடையில் எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது.
ஐ.தே.க.வுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள்
சமகி ஜன பலவேகய (SJB), சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (NFF) ஆகிய கட்சிகள் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.