விரைவில் தாயாக பெண் எடுத்த முடிவு; கடைசியில் நேர்ந்த சோகம்
விரைவில் தான் தாயாக வேண்டுமென உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் சிகிரியா பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்கொண்ட பூஜை
குறித்த பெண்ணுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, இதுவரை குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து விரைவில் தான் தாயாகவேண்டுமென எண்னிய பெண் , தனது உறவினர் நடத்தும் ஆலயம் ஒன்றுக்குச் சென்று மூன்று நாட்கள் உள்ளூர் மருந்தை உட்கொண்டுள்ளார்.
பின்னர், இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (10) ஜெயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாயாக ஆசைப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.