வீதியில் பெண் கொலை; மர்ம நபர்கள் யார்? பொலிஸார் தீவிர விசாரணை
இரத்தினபுரி - அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து அயகம பொலிஸார், காயமடைந்த பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் , பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அயகம - தூல்கல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.