2 ஆண்களை திருமணம் செய்த ஒரே பெண் ; அடுத்த நாளே மாயமான புதுமண பெண்
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும், தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடன் தஞ்சாவூரில் திருமணம் நடந்தது.
இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம், பெண்ணுக்கு 3 பவுன் நகை வழங்கப்பட்டு, சுமார் ரூ.15 லட்சம் செலவில் திருமணம் பிரமாண்டமாக நடந்துள்ளது.

வழக்குப்பதிவு
திருமணம் முடிந்த 2-வது நாள் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கூறி குறித்த பெண் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தீபாவளிக்கும் தஞ்சாவூர் செல்லாததால் சந்தேகமடைந்த கணவர் நேற்று கோவில்பட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குறித்த பெண் இல்லை.
அப்போது இளைஞர் ஒருவர் அங்கு வந்து, தன் மனைவி எங்கே என கேட்டுள்ளார். தனக்கும் குறித்த பெண்ணுக்கும் கோவிலில் திருமணம் நடந்ததாக அவர் கூறியதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் இருவரையும் ஏமாற்றியது தெரியவந்தது.
குறித்த பெண்ணின் பெற்றோர் என கூறிக்கொண்டவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளார். கார்த்திகா அக்காள் மகள் என்றும், தற்போது மலேசியாவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அளித்த புகாரில் கோவில்பட்டி மேற்கு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கும்பல் வேறு யாரையும் ஏமாற்றியதா, மதுரையை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய முயன்றதா என விசாரணை நடக்கிறது.