ஆசைஆசையாய் பேயை காதலித்து திருமணம் ; விவாகரத்து கேட்டு அழும் பரிதாப நிலை!
ஆசைஆசையாய் பேயை காதலித்து திருமணம் செய்துகொண்டு பரப்ரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்தை சேர்ந்த பாடகியான ரொக்கர் ப்ரொகார்டி தற்போது விவாகரத்து வேண்டும் என கூறி இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பாழடைந்த சர்ச்சில் திருமணம்
கடந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது ரொக்கர் ப்ரொகார்டி , எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்துகொண்டார். ரொக்கர் ப்ரொகார்டி - எட்வர்டோ திருமணம் ஒரு பாழடைந்த சர்ச்சில் நடைப்பெற்றது.
பாடகியான ப்ரொகார்டி, தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் விவாகரத்து கோரியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு தனது கணவர் தன் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார் எனவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பெரும் சங்கடத்தில் உள்ள ப்ரொகார்டி, பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாடியுள்ளார். இவர்களது திருமணத்திற்கு உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்
மறைந்த பொப் பாடகி மர்லின் மன்றோ, இங்கிலாந்து அரசர் ஹென்ரி போன்றோர் தங்களது திருமணத்தில் கலந்துகொண்டதாக ப்ரொகார்டி தெரிவித்தார்.
தன் கணவரை சந்திக்கும் முன்பு வரை பேய்கள் போன்றவற்றின் மீது ப்ரொகார்டிக்கு நம்பிக்கையே இருந்ததில்லையாம்.
ஆனால் திருமணத்தன்றே தன் கணவரின் சில செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறிய அப்பெண், ஹனிமூன் சென்றபோது தான் அவர் எல்லை மீறி நடந்துகொண்டதாக கூறியுள்ளார் .
கணவர் மீது கொண்ட காதலால் திருமணத்தை தக்கவைக்க முயற்சித்திருக்கிறார். எனினும், அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து தன்னை வேதனைக்குள்ளாக்கியதால், தற்போது விவாகரத்து செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார்.
அதோடு பிரிந்து சென்றதால், குழந்தைகள் அழுவது போல, நடு இரவில் அலறுவது போன்ற சத்தங்களை எழுப்பி தன்னை கணவர் எட்வர்டோதுன்புறுத்திவருவதாக ரொக்கர் ப்ரொகார்டி , கூறியிருக்கிறார்.